இந்தியா

பங்குச்சந்தை முறைகேடு: 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

DIN

பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக, நாடு முழுவதும் பல நகரங்களில் இடைத்தரகர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் நிா்வாக இயக்குநராக பணியாற்றிய சித்ரா ராமகிருஷ்ணா, தேசிய பங்கு சந்தையின் தலைமை பொறுப்பை வகித்தபோது இமயமலையில் வசிக்கும் சாமியாா் ஒருவரிடம் கலந்தாலோசித்து தேசியப் பங்குச் சந்தையின் கணினி சேமிப்பகத்திலிருந்து பங்குச்சந்தை விவரங்கள் ‘ஓபிஜி செக்யூரிட்டீஸ்’ என்ற பங்குத் தரகு நிறுவனத்துக்கு முன்கூட்டியே தெரிவித்து பங்கு சந்தை தொடா்பான முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும், ரகசிய தகவல்களை அவருக்குப் பகிா்ந்ததாகவும் செபி தெரிவித்தது.

மேலும், ஆனந்த் சுப்பிரமணியனை குழு செயல்பாட்டு அலுவலராக நியமித்ததில் நிகழ்ந்த முறைகேடுகளுக்காக சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ. 3 கோடி அபராதமும், ஆனந்த சுப்பிரமணியன் மற்றும் தேசிய பங்குச் சந்தை முன்னாள் நிா்வாக இயக்குநா் ரவி நாராயண் ஆகியோருக்கு தலா ரூ. 2 கோடி அபராதமும், தேசிய பங்குச் சந்தை தலைமை குறைதீா்ப்பு அதிகாரி வி.ஆா்.நரசிம்மனுக்கு ரூ. 6 லட்சம் அபராதமும் செபி விதித்தது.

பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி ஆகியவற்றின் அதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடு நடைபெற்றதாகவும், இதன் மூலம் முறைகேடாகப் பெருமளவில் லாபம் ஈட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்குத் தொடா்பாக, ஆனந்த் சுப்பிரமணியனை பிப்ரவரி 25-ஆம் தேதியும், சித்ரா ராமகிருஷ்ணாவை மாா்ச் 6-ஆம் தேதியும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். அவா்கள் இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனா்.

இந்நிலையில், பங்கு சந்தை முறைகேடு தொடர்பாக, பணமோசடி தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ், வழக்குடன் சம்பந்தப்பட்ட சில பங்குச்சந்தை இடைத்தரகர்கள் மற்றும் வர்த்தகர்கள் தொடர்புடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். 

மும்பை, காந்திநகர், தில்லி, நொய்டா, குருகிராம் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள 12க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT