இந்தியா

ஆசிரம பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும்: அஜித் பவார்

21st May 2022 03:35 PM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஆசிரமப் பள்ளிகளின் மாணவர்களுக்கு வழங்கப்படும் தரமான கல்வி, நகர்ப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரித்துள்ளார். 

தாணே மாவட்டத்தில் ஷாஹாபூர் தாலுகாவில் உள்ள கோத்தாரேயில் அரசு ஆசிரமப் பள்ளியை வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

ADVERTISEMENT

ஆசிரமப் பள்ளிகள் பழங்குடியின மாணவர்களுக்கான குடியிருப்புப் பள்ளிகள்.

எல்லோரையும் போல, கல்வி என்பது பழங்குடியினரின் அடிப்படை உரிமை.

பழங்குடியினப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களை நகரங்களில் வசிப்பவர்களுக்கு இணையாகக் கொண்டுவர மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. 

ஆசிரம பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க, ஆசிரியர்களை பணியமர்த்தும் பணியை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும். 

ஆசிரமப் பள்ளி மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்க மாநில அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலக நிகழ்வுகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான பயிற்சிகளை இந்த மாணவர்களுக்கு வழங்க வேண்டும். 

ஆசிரமப் பள்ளிகளைக் கட்டினால் மட்டும் போதாது, தரமான கல்வி தேவை என்றார் அவர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT