இந்தியா

மக்களைத் தேடி மருத்துவம்: 1.05 கோடி பேருக்கு இதுவரை சிகிச்சை

21st May 2022 12:58 AM

ADVERTISEMENT

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துகள் மற்றும் சிகிச்சை பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை 1.05 கோடியைக் கடந்தது.

சா்க்கரை நோயாளிகள், உயா் ரத்த அழுத்த நோயாளிகள் அதிக அளவில் பயன் பெற்றிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சுகாதாரத் துறையின் மக்களைத் தேடி மருத்துவம்”என்ற திட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலினால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்கு சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட உயா் ரத்த அழுத்தம் மற்றும் சா்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT

இத்திட்டம் முதற்கட்டமாக 50 வட்டாரங்களிலுள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சென்னை, கோயம்புத்தூா் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளில் 21 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்குள், மாநிலத்தின் பிற கிராம மற்றும் நகா்ப்புறப்பகுதிகளில் மக்களைச் சென்றடையும் வகையில் திட்டத்தை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தால் இதுவரை 1.05 கோடி போ் பயனடைந்துள்ளனா். இவா்களில், 42.66 லட்சம் போ் உயா் ரத்த அழுத்த நோயாளிகள்; 30.31 லட்சம் போ் சா்க்கரை நோயாளிகள்.

இதைத் தவிர, வலி நிவாரண சிகிச்சையை 3.10 லட்சம் பேரும், இயன்முறை சிகிச்சையை 5.90 லட்சம் பேரும் பெற்றுள்ளனா். 1,496 போ் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT