இந்தியா

ஆப்கனில் நிலச்சரிவு: இடிபாடுகளில் சிக்கி இருவர் பலி

21st May 2022 05:06 PM

ADVERTISEMENT

 

ஆப்கானிஸ்தானின், மத்திய பாமியான் மாகாணத்தின் வாராஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததாக மாகாண நிர்வாக செய்தித் தொடர்பாளர் சிபோர் சிகானி சனிக்கிழமை தெரிவித்தார். 

அதிகாரியின் கூற்றுப்படி, 

வெள்ளிக்கிழமை பிற்பகல் வாராஸ் மாவட்டத்தில் உள்ள கஃப்தர் கான் கிராமத்தில் இயற்கை பேரழிவு ஏற்பட்டது. அப்போது சகோதரிகள் இருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 

ADVERTISEMENT

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். முன்னதாக திங்களன்று, வடக்கு படக்ஷான் மாகாணத்தின் ஷோலார்-இ-பயான் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT