இந்தியா

காஷ்மீரில் சுரங்கப்பாதை சரிவு: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

21st May 2022 03:55 PM

ADVERTISEMENT

 

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சமீபத்தில் இடிந்து விழுந்த சுரங்கப்பாதையின் இடிபாடுகளில் சிக்கியிருந்த மேலும் மூவரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து இறப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. 

இடிபாடுகளுக்குள் சிக்கிய 9 தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை சனிக்கிழமை அதிகாலை மீண்டும் தொடங்கியது.  நிலச்சரிவு மற்றும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளிக்கிழமை மாலை தேடும் பணி இடைநிறுத்தப்பட்டது.

பல மணி நேரம் நீடித்த தேடுதலுக்குப் பிறகு, மீட்புக் குழுக்கள் இரண்டு உடல்களை மீட்டு, அடையாளம் காண அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

இடிபாடுகளுக்கு சிக்கியிருந்த மற்றொரு உடல் இன்று மீட்கப்பட்டது, உடலை வெளியே எடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ராம்பன் மாவட்டத்தில் கூனி நல்லா அருகே நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதை வியாழனன்று திடீரென சரிந்து விழுந்தது. இதில் ஒருவர் பலியானர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT