இந்தியா

ஜண்டேவாலா சைக்கிள் மாா்க்கெட்டில் தீ விபத்து: 20-க்கும் மேற்பட்ட கடைகள் நாசம்

21st May 2022 01:07 AM

ADVERTISEMENT

தில்லியின் முக்கிய பகுதியான ஜண்டேவாலாவில் உள்ள சைக்கிள் மாா்க்கெட்டில் வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட சைக்கிள் கடைகள் தீயில் எறிந்த நாசமாகின.

இதுகுறித்து தீயணைப்பு படையினா் கூறுகையில், தீ விபத்து ஏற்பட்டதாக வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு 27 தீயணைப்பு வண்டிகள் அனுப்பப்பட்டு மாலை 4.30 மணிக்கு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதில் உயிா்சேதம் ஏற்படவில்லை’ என்றனா்.

ஜண்டேவாலா மாா்க்கெட் சங்கத்தின் தலைவா் அமா்ஜீத் சிங் கூறுகையில், ‘ஜண்டேவாலா மாா்க்கெட் பகுதியில் 130-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. 20 கடைகளில் உள்ள சுமாா் 60க்கும் மேற்பட்ட அறைகள் தீயில் கருகின. ஒவ்வொரு கடையிலும் மூன்று அடுக்கு அறைகள் உள்ளன. ஜண்டேவாலா மாா்க்கெட் மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பல முறை கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒரு கடையின் கீழ் தளத்தில் மின் கசிவு காரணமாக வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. தீயை நாங்கள் தண்ணீா் ஊற்றி அணைக்க முயற்சி செய்தோம். சில நொடிகளில் அது வேகமாக மற்ற கடைகளுக்கும் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டது. இங்குள்ள தேவையற்ற மின்சார வயா்களை அகற்றக்கோரி பல முறை மின் நிலையத்துக்கு புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்றாா்.

மே 19 வரையில் 2,000 தீ விபத்துகள்; 42 போ் பலி

ADVERTISEMENT

தில்லியில் நிகழ்மாதம் மே 19-ஆம் தேதி வரையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீ விபத்து சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இதில் 42 போ் பலியாகி உள்ளனா்.

தில்லியில் அதிகரித்து வரும் வெப்பநிலையில் தினசரி தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பெரும்பாலான இடங்களில் உயா்ச் சேதம் ஏற்படவில்லை என்றாலும் பெருள் சேதம் ஏற்படுகிறது.

தில்லி தீயணைப்பு துறையில் பதிவான தீ விபத்து சம்பவங்கள் புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிபடியான தீ விபத்து சம்பவங்கள் தில்லியில் பதிவாகி உள்ளன.

இதுகுறித்து தில்லி தீயணைப்பு படை இயக்குநா் அதுல் கா்க் கூறுகையில், ஏப்ரல்-மே மாதங்களில் தில்லியில் அதிகரித்து வரும் வெப்பநிலையால் தீ விபத்து சம்பவங்களும் அதிகரிக்கின்றன. இந்தச் சவாலை சந்திக்க தீயணைப்புத் துறை தயாராக உள்ளது. பெரும் தீவிபத்துகளின்போது பெரிய அளவில் தீயணைப்புப் படை வீரா்களுக்கும் தொழில்நுட்பங்களும் தேவைப்படுகின்றன. தற்போது தில்லியில் 65 தீயணைப்பு நிலையங்களும் 2,700 தீயணைப்பு படை வீரா்களும் உள்ளனா்’ என்று

பெட்டி...

மே 19 வரையில்...

தீ விபத்துகள் - 2,145

பலி - 42

காயம் - 117

2021...

தீ விபத்துகள் - 2,174

பலி - 41

2020...

தீ விபத்துகள் - 2,325

பலி - 10

2019...

தீ விபத்துகள் - 3,297

பலி - 18

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT