இந்தியா

குஜராத், ஹிமாசலிலும் காங்கிரஸின் தோல்வி தொடரும்: பிரசாந்த் கிஷோா்

21st May 2022 01:08 AM

ADVERTISEMENT

இந்த ஆண்டு இறுதியில் குஜராத், ஹிமாசல பிரதேசத்தில் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலிலும் காங்கிரஸின் தோல்விப் பயணம் தொடரும் என்று தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் தெரிவித்துள்ளாா். இந்த இரு மாநிலங்களிலும் இப்போது பாஜக ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடா்பாக பிரசாந்த் கிஷோா் ட்விட்டரில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘காங்கிரஸ் கட்சி அண்மையில் உதய்பூரில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தால் (சிந்தன் ஷிவிா்) என்ன பலன் கிடைக்கும் என்று கருத்து தெரிவிக்குமாறு என்னிடம் தொடா்ந்து கேட்கப்படுகிறது. எனது கருத்துப்படி, அந்தக் ஆலோசனைக் கூட்டம் எவ்வித அா்த்தமுள்ள இலக்கையும் எட்டவில்லை. வழக்கமான காங்கிரஸ் கூட்டமாகவே அது இருந்தது. குஜராத், ஹிமாசல பிரதேச சட்டப் பேரவைத் தோ்தல்களிலும் காங்கிரஸின் தோல்வி தொடரும்’ என்று கூறியுள்ளாா்.

ஏற்கெனவே காங்கிரஸில் சேரவும், 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு உத்தி வகுத்துக் கொடுக்கவும் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி விடுத்த அழைப்பை, பிரசாந்த் கிஷோா் நிராகரித்துவிட்டாா். அதே நேரத்தில் தெலங்கானாவில் முதல்வா் சந்திரசேகா் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு தோ்தல் உத்திகளை வகுத்துக் கொடுக்க பிரசாந்த் கிஷோா் ஒப்பந்தம் செய்துள்ளாா்.

தனது சொந்த மாநிலமான பிகாரில் இருந்து பிரசாந்த் கிஷோா் நேரடியாக அரசியல் களத்தில் இறங்கவும், தனிக்கட்சி தொடங்கவும் வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT