இந்தியா

ஹைதராபாத்தில் மீண்டும் கௌரவக் கொலை: இளைஞர் குத்திக் கொலை

21st May 2022 11:52 AM

ADVERTISEMENT

 

ஐதராபாத்தில் மதம் மாறிய காதல் திருமணம் தொடர்பாக 24 வயது இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஷாஹினாயத் கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேகம் பஜார் பகுதியில் உள்ள மீன் சந்தைக்கு அருகே நீரஜ் குமார் பன்வார்(22), வெள்ளிக்கிழமை இரவு அவரது மனைவியின் உறவினர்கள் 5 பேரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். 

நீராஜ் கடையை மூடிவிட்டு தனது தந்தை ராஜேந்தர் பன்வாருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் கிரானைட் கல்லால் அவரது தலையில் தாக்கி, தேங்காய் வெட்டும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தன் தந்தை கண் முன்னே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ADVERTISEMENT

சில்லறை நிலக்கடலை வியாபாரம் செய்து வந்த பேகம் பஜார் பகுதியில் உள்ள கோல்சவாடியை சேர்ந்த பன்வாரிலால் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சனா (20) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

திருமணத்திற்கு சஞ்சனாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் நீரஜ் மீது அவர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. பெண் வீட்டார் கடந்த 6 மாதங்களாக நீரஜை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக நீரஜை கண்காணித்து, வெள்ளியன்று மழை காரணமாக அதிக மக்கள் இல்லாத நிலையில், அவர்கள் சதித்திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்தனர். 

இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கொலை செய்துவிட்டுத் தப்பியோடினர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நீரஜை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகத்தின் பேரில் சிலரை கைது செய்தனர். ஹைதராபாத்திலிருந்து சுமார் 150 கிமீ தொலைவில் உள்ள குருமிட்கல் என்ற இடத்தில் 4 குற்றவாளிகளை சனிக்கிழமை கைது செய்தனர்.

ஹைதராபாத்தில் ஒரு மாதத்திற்குள் நடந்த இரண்டாவது கௌரவக் கொலை இதுவாகும். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT