இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: பயங்கரவாதி சுட்டுக் கொலை

20th May 2022 03:19 PM

ADVERTISEMENT

 


ஜம்மு-காஷ்மீரில், இந்திய எல்லை வழியே ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். 

குப்வாரா மாவட்டத்தில் உள்ள தங்தார் செக்டார் பகுதியில் உள்ள இந்திய  எல்லை வழியே ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டு, ஊடுருவல் முயற்சியை முறியடித்துள்ளனர். 

தர்ஷன் போஸ்ட் அருகே கட்டுப்பாடு கோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதைக் கவனித்த பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், ஊடுருவிய பயங்கரவாதி கொல்லப்பட்டார். மற்றவர்களைப் பிடிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT