இந்தியா

பெகாஸஸ் வழக்கு: விசாரணை குழுக்கு கூடுதல் அவகாசம்

20th May 2022 11:36 AM

ADVERTISEMENT

பெகாஸஸ் வழக்கில் கூடுதல் அவகாசம் வழங்கி நான்கு வார காலகத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய நிபுணர் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

விசாரணை மே மாத இறுதிக்குள் நிறைவடைந்துவிடும் என்றும் பின்னர், மேற்பார்வையிடும் நீதிபதியிடம் விசாரணை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணா தெரிவித்துள்ளார்.

பின்னர், நிபுணர் குழுவின் அறிக்கையை மேற்பார்வையிடும் நீதிபதி ஆய்வு செய்து இறுதி செய்ய வேண்டும் என்றும் ஜூன் 20ஆம் அதை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT