இந்தியா

கர்நாடகத்தில் 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?: கல்வி அமைச்சர்

20th May 2022 01:45 PM

ADVERTISEMENT

 

கர்நாடக மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தற்காலிக தேதியை அறிவித்தார் அம்மாநில கல்வி அமைச்சர் பி.சி நாகேஷ். 

மேலும், அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சமீபத்தில் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. இதன் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற மாணவர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கல்வி அமைச்சர் டிவிட்டர் மூலம் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் 22 முதல் மே 18 வரை நடத்தி முடிக்கப்பட்டது. இதில் மாநிலம் முழுவதிலிருந்து சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதினர். 

இந்நிலையில், இதற்கான மதிப்பீட்டுச் செயல்முறை அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதன் தேர்வு முடிவுகள் ஜூன் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று அவர் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

தேர்வு முடிவுகள் www.karresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். 

இந்தாண்டு தேர்வுகள் ஆப்லைன் முறையில் நடத்தப்பட்டன. கரோனா தொற்றுக்கு மத்தியில் ஜூன் மாதம் நடைபெறவிருந்த 12-ம் வகுப்புத் தேர்வு முன்னதாகவே நடத்தி முடிக்கப்பட்டது. 

கர்நாடக இடைநிலைக் கல்வித் தேர்வு வாரியத்தின் (KSEEB) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை மாநில அரசு வெளியிட்டது.

எஸ்எஸ்எல்சி தேர்வில் மொத்தம் 85.63 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அமைச்சர் கூறினார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT