இந்தியா

கரோனா: நாட்டில் ஒரே நாளில் புதிதாக 2,614 பேர் குணமடைந்தனர் 

20th May 2022 09:33 AM

ADVERTISEMENT


புது தில்லி: நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு 2,364 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக  2,259 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2,614 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் கடந்த சில நாள்களாக ஒரு நாள் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 2,259 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,31,31,822 ஆக உள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் 20 பேர் உயிரிழந்ததால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,323 ஆக உள்ளது. உயிரிழந்தோரின் விகிதம்1.22 சதவிகிதமாக குறைந்துள்ளது.

ADVERTISEMENT

நேற்று ஒரேநாளில் 2,614 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,92,455 ஆக உயர்ந்துள்ளது.  குணமடைந்தோரின் விகிதம் 98.75 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

தற்போது 15,044 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.03 சதவிகிதமாக உள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 1,91,96,32,518 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 15,12,766 கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 84.58 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,51,179 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | வரம்பு மீறல்! | அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவு குறித்த தலையங்கம்

ADVERTISEMENT
ADVERTISEMENT