இந்தியா

மழை பாதிப்புப் பகுதிகளை பார்வையிட்டார் கர்நாடக முதல்வர்

20th May 2022 12:43 PM

ADVERTISEMENT

 

பெங்களூருவில் கனமழைக் காரணமாக பாதிப்படைந்தப் பகுதிகளை கர்நாடக முதல்வர் பொம்மை இன்று (மே-20) பார்வையிட்டார். 

தார்வாட் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு கனமழைக் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. 

இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழனன்று தனது டிவிட்டர் பக்கத்தில், “கேரள கடற்கரை மற்றும்  கர்நாடகத்தின்  தெற்கு பகுதிகளிலும் அடுத்தடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழையிலிருந்து மிக கனமழையாக பொழியும்” எனக் கூறியிருந்தது.  

ADVERTISEMENT

பெங்களூருவின் ஊரக மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அடுத்த 4-5 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி அந்தமானில் பருவமழை மேகங்கள் உருவாகியுள்ளது. அசானி புயலால் இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே பருவ மழை பொழிந்துள்ளதால் அந்தமான் பகுதிகளில் ஈரப்பதம் மிகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT