இந்தியா

போலியாக தயாரிக்கப்பட்ட 7000 ஆதார் அட்டைகள்: சாதுர்யமாக பிடித்த காவல்துறை

20th May 2022 06:21 PM

ADVERTISEMENT

மோசடியாக 7 ஆயிரத்திற்கும் அதிகமான ஆதார் அட்டைகளை தயாரித்து விநியோகித்த நபரை இந்தூர் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சட்டவிரோதமாக போலியாக ஆதார் அட்டைகள் விநியோகம் நடந்துவருவதாக சைபர் கிரைம் காவல்பிரிவிற்கு புகார் வந்தது. இதுதொடர்பாக அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ஹைதராபாத் காவல்துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிக்க | ராஜ் தாக்கரேவின் அயோத்தி பயணம் ஒத்திவைப்பு

இந்நிலையில் இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு மூளையாக செயல்பட்ட பவன் கோட்டியா என்னும் நபரை மத்தியப்பிரதேசத்தில் பதுங்கியிருப்பதை அரிந்த காவல்துறையினர் அம்மாநில காவல்துறையினரின் உதவியுடன் பவனை கைது செய்தனர். விசாரணையில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பவன் ஆதார் அட்டைகளைத் தயாரித்து விநியோகித்து வருவது தெரியவந்தது.

ADVERTISEMENT

காவல்துறையிடமிருந்து தப்பிப்பதற்காக குற்றம்சாட்டப்பட்டவர் தொடர்ச்சியாக தனது இருப்பிடத்தை மாற்றி வந்ததும் விசாரணையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. பவன் தன்னுடைய நண்பர் நோஹித்துடன் இணைந்து அசாமில் 2016ஆம் ஆண்டு ஆதார் அட்டை வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் பின்னர் ஹைதராபாத்தில் போலியாக ஆதார் அட்டையை தயாரித்து தற்போது சிக்கிக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT