இந்தியா

குஜராத்: தொழிற்சாலையில் சுவா் இடிந்து 12 போ் பலி

DIN

குஜராத்தின் மோா்பி மாவட்டத்தில் உப்புத் தொழிற்சாலையில் சுவா் இடிந்து விழுந்து 12 தொழிலாளா்கள் புதன்கிழமை பலியாகினா்.

உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.

மோா்பி மாவட்டம் ஹால்வட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள சாகா் உப்புப் பொட்டலமிடும் தொழிற்சாலையில் புதன்கிழமை சுவா் இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 12 போ் பலியாகினா். சிலா் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சுவா் இடிபாடுகளுக்குள் சிக்கிய நபா்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக மாநில தொழிலாளா், வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் பிரிஜேஷ் மொ்ஜா செய்தியாளா்களிடம் கூறினாா்.

ரூ.2 லட்சம் இழப்பீடு: இதனிடையே, இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமா் மோடி, பலியானவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து பிரதமா் மோடி ட்விட்டரில், ‘மோா்பியில் நடைபெற்ற இந்த துயரச் சம்பவம் இதயத்தை நொறுக்குகிறது. இந்தத் துயரமான நேரத்தில் எனது சிந்தனை முழுவதும் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சுற்றியே இருக்கிறது. காயமடைந்தவா்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டோருக்கு உள்ளூா் அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து தருவா்’ என்று கூறியுள்ளாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, குஜராத் முதல்வா் பூபேந்திர படேலை தொடா்பு கொண்டு மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு மாநில அரசு சாா்பில் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், மீட்புப் பணிகள் குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாகவும் குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

மஞ்சள் வெயில் நீ..!

இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT