இந்தியா

நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடிக்கு கோரிக்கை

16th May 2022 10:05 AM

ADVERTISEMENT


பருத்தி, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். 

நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 

விலை உயர்வால் ஜவுளித் துறை தொழில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

ADVERTISEMENT

ஆலைகளில் பருத்தி மற்றும் நூல் இருப்பு உள்ளிட்டவை குறித்த விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும்.

பருத்தி மற்றும் நூலுக்கான இருப்பு தொடர்பான அறிவிப்பினை அனைத்து நூற்பாலைகளுக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு சரக்குகள் இந்தியத் துறைமுகங்களை வந்தடைய மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் என்பதால், இறக்குமதி வரி விலக்கு 2022, ஜூன் 30 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். எனவே, செப்டம்பர் 30 வரை உள்ள அனைத்து ஒப்பந்தங்களுக்கும் இறக்குமதி வரி விலக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT