இந்தியா

நேற்றுப் போல் இன்று இல்லை என மகிழ்ச்சியோடு பாடும் தில்லி மக்கள்

16th May 2022 03:09 PM

ADVERTISEMENT

தலைநகர் தில்லியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 49.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்த நிலையில், இன்று காலை கண்விழித்த தில்லி வாழ் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

தில்லி நகரின் பல இடங்களில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி, அந்நகர மக்களை வாட்டி வதைத்தது. நகரின் முக்கிய இடங்களில் அமைந்திருக்கும் இரண்டு வானிலை ஆய்வு மையங்களிலும், தில்லியில் நேற்று 49 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்ததாகக் கூறப்பட்டது.

இதையும் படிக்க.. மலைப்பாம்பு முட்டைகளால் நின்றுபோன நெடுஞ்சாலைப் பணி: அடடா!

இந்த நிலையில், இன்று காலை தில்லியில் சூரியனை மறைத்தபடி மேகக் கூட்டங்கள் அணிவகுத்து வந்தன. அதற்குக் காரணம், தில்லியில் இன்று மேகமூட்டம் காணப்படும் என்றும், மழை அல்லது மணல் புயல் வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன் கணித்திருந்ததே காரணம். இதனால், நேற்று வாட்டிய கோடை வெயில் இன்று விடுமுறை எடுத்துக் கொண்டு மேகக் கூட்டத்துக்கு வாய்ப்பளித்துவிட்டு நழுவிக் கொண்டது.

ADVERTISEMENT

இதனால், வாட்டும் வெயிலிலிருந்து தில்லி நகர் வாழ் மக்கள் சற்று மீண்டனர். 

இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், பஞ்சாப் மற்றும் ஹரியாணா பகுதிகளில் பருவமழைக்கு முந்தைய வேலைகளாக புயல் சின்னம் உருவாகி வருவதால், இந்த நிம்மதி கிடைத்திருப்பதாகவும், இது திங்கள் மற்றும் செவ்வாய் வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT