இந்தியா

அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

16th May 2022 04:18 PM

ADVERTISEMENT

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று ( திங்கட்கிழமை) முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.

இந்தியாவின் விவசாயம் தென்மேற்கு பருவமழையையே பெரிதும் நம்பி உள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் தேதியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கியுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. 

அந்தமானில் பெய்து வரும் இந்த தென்மேற்கு பருவமழை இன்னும் 2-3 நாள்களில் வங்காள விரிகுடாவில் தெற்கு பகுதியைச் சென்றடைந்து அங்கு மழையை கொடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தின் மேலடுக்கில் நிலவும் புயல் காற்றின் சுழற்சியினால் இன்னும் 5 நாட்களில் லட்சத்தீவு, தமிழகம் மற்றும் கேரளத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெற்கு கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகளில் வருகிற புதன்கிழமை கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த வாரம் இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைக் காட்டிலும் முன்னதாக வருகிற 27ஆம் தேதியன்று கேரளத்தில் தொடங்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT