இந்தியா

இந்திய - நேபாள உறவு ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் பயனளிக்கும்: பிரதமர் மோடி

16th May 2022 04:52 PM

ADVERTISEMENT

காத்மாண்டு: இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான நட்புறவு ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.

காத்மாண்டுவில் புத்த பூர்ணிமா கொண்டாட்டத்தில் உரையாற்றும் போது பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதையும் படிக்க: பருத்தி விலையை குறைக்கக்கோரி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

உலகம் முழுவதும் உள்ள சூழ்நிலையில், இரு நாட்டுக்கிடையேயான ஆழமான நட்பு முழு மனிதகுலத்திற்கும் பயனளிக்கும். மேலும் புத்த பகவான் மீது நமது இரு நாடுகளின் பக்தியும், நம்பிக்கையும் நம்மை ஒரே இழையில் இணைக்கிறது. அனைவரும் ஒரே குடும்ப உறுப்பினர்களாக ஆக்குகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

ADVERTISEMENT

பிரதமர் மோடி தனது உரையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் ஆழப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி தனது உரையின் போது, ​​புத்தபெருமானைப் பற்றி பல குறிப்புகளை வெளியிட்டார் மற்றும் புத்த மதத்தின் செய்தியை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT