இந்தியா

நீட் தேர்வு: விண்ணப்பிக்க மே 20 வரை அவகாசம்

16th May 2022 08:03 AM

ADVERTISEMENT

 

இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது.

நேற்றுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில், தற்போது மே 20ஆம் தேதி இரவு 9 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் இதுவரை 20 லட்சம் பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். 

ADVERTISEMENT

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட் தோ்வு மூலம் நடைபெற்று வருகிறது.

நீட் தோ்வை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. 2022-23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு ஜூலை 17-ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.

நீட் தோ்வுக்கு  இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்கியது. மே மாதம் 6-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் மே 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது 20 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், மேலும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20ஆம் தேதி இரவு 9 மணி வரை அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT