இந்தியா

நாட்டில் புதிதாக 2,202 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 27 பேர் பலி

16th May 2022 10:00 AM

ADVERTISEMENT

நாட்டில்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,202 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 27 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழந்ததால் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5,24,241 ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று ஒரேநாளில் 2,550 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,82,243 ஆக உயர்ந்துள்ளது.  

தற்போது 17,317 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ADVERTISEMENT

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 1,91,37,34,314  கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 3,10,218 கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 

இதையும் படிக்க | 

ADVERTISEMENT
ADVERTISEMENT