இந்தியா

தள்ளாத வயதிலும் தணியாத ஆர்வத்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முன்னாள் முதல்வர்!

16th May 2022 01:47 PM

ADVERTISEMENT

 
தள்ளாத வயதிலும் கல்வி மீது தணியாத தாகம் கொண்ட ஹரியானா முன்னாள் முதல்வர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா, 2021 ஆம் ஆண்டு, ஹரியானா தேசிய திறந்தவெளி நிலையத்தின் கீழ் 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதினார். இருப்பினும், அவர் இன்னும் பத்தாம் ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில்  தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி, அவரது பிளஸ் 2 தேர்வு முடிவு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.  

இதையடுத்து பத்தாம் ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறுவதற்காக கடினமான பயிற்சியை மேற்கொண்டு தேர்வு எழுதினார்.

இதில், 100க்கு 88 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இதையடுத்து அவரது பிளஸ் 2 தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. அதிலும் அவர் அனைத்து பாடங்களிலும் வெற்றி பெற்றார். 

ADVERTISEMENT

வெற்றி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களை பெறுவதற்காக சண்டிகரில் உள்ள தேர்வு மையத்திற்கு சென்றவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், "இப்போது நான் ஒரு மாணவன், இப்போது அரசியல் கருத்துக்களுக்கு இடமில்லை," என கூறிவிட்டு சென்றார். கல்வி வாரிய அதிகாரிகள் அவருக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வழங்கினர்.

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா தனது 87 ஆவது வயதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

இதையடுத்து பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

படிப்பதற்கு வயது ஒரு தடையே இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா.

கடந்த 199 முதல் 2004 ஆம் ஆண்டு வரை ஹரியானா மாநில முதல்வராக பதவி வகித்தவர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இந்திய தேசிய லோக்தள கட்சியின் தலைவரான இவர், தனது ஆட்சி காலத்தில் தேர்வாணை முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், விசாரணை நடத்திய தில்லி நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து தில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய அஞ்சல் துறை வங்கியில்  எக்ஸிகியூட்டிவ் வேலை

ADVERTISEMENT
ADVERTISEMENT