இந்தியா

கொதிக்கும் கொப்பரையானது தில்லி: நேற்றைய வெப்பநிலை?

16th May 2022 01:27 PM

ADVERTISEMENT

புது தில்லி: கொதிக்கும் கொப்பரை போல, தலைநகர் தில்லி மாறிவருகிறது. ஞாயிறன்று, நகரின் இரண்டு வானிலை ஆய்வு மையங்களில் இதுவரை இல்லாத அளவாக 49 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

இந்த வெப்பநிலை அதிகரிப்பால் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெருந்துயரம் நேரிட்டுள்ளது. பள்ளிச் செல்லும் பிள்ளைகள், முதியவர்கள், வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் போன்ற ஏராளமானோருக்கு உடலில் நீரிழப்பு, கடுமையான காய்ச்சல், சரும பாதிப்பு உள்ளிட்டவை நேரிடுகிறது.

இதையும் படிக்க.. குழந்தையைக் கொன்ற சிறுவன் கைது; விசாரித்த காவலர்களுக்கு பேரதிர்ச்சி

இது குறித்து சஃப்தார்ஜங் மருத்துவமனை மருத்துவர் கூறுகையில், ஏராளமான நோயாளிகள் கடுமையான காய்ச்சலுடன் வருகிறார்கள். இது கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் உடல்நலப் பிரச்னையாகும்.

உடலின் வெப்பநிலையை சமநிலையில் தக்க வைக்கும் உடல் உறுப்புகள் போதுமான அளவில் வளர்ச்சியடையாததால், குழந்தைகளுக்கு கோடைக்காலத்தில் உடல்நல பாதிப்புகள் ஏற்படும். வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களும் கோடை வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

அதைத் தவிர, தில்லியில் வாழும் மக்கள் வெப்பத்தால் எளிதாக பாதிக்கப்படுவார்கள், ஏனெனில், அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு இல்லாததும், வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் தெரியாததும் காரணம் என்கிறார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT