இந்தியா

திரிபுரா முதல்வர் அமைச்சரவையில் 11 எம்எல்ஏக்கள் பதவியேற்பு

16th May 2022 03:06 PM

ADVERTISEMENT

 

திரிபுராவில் முதல்வர் மாணிக் சாஹாவின் அமைச்சரவையில் மொத்தம் 11 எம்எல்ஏக்கள் இன்று அகர்தலாவில் உள்ள ராஜ்பவனில் பதவியேற்றுக்கொண்டனர். 

ராஜ்பவனில் முதல்வர் மாணிக் சாஹா, முன்னாள் முதல்வர் பிப்லக் குமார் தேப் மற்றும் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் எஸ்.என்.ஆர்யா அமைச்சரவை அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

2 பழங்குடி மக்கள் முன்னணி மற்றும் 9 பாஜக உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் திரிபுராவின் அமைச்சரவையின் அமைச்சர்களாக பதவியேற்றனர். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை திரிபுராவின் முதல்வராக சாஹா பதவியேற்றார். 

ADVERTISEMENT

முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப் ராஜினாமா செய்ததையடுத்து, சனிக்கிழமை நடைபெற்ற பாஜக சட்டமன்ற கட்சிக் கூட்டத்தில் சாஹாவை சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டது. 

காங்கிரஸில் இருந்து விலகி கடந்த 2016ல் பாஜகவில் இணைந்தார் சாஹா. அவர் 2020இல் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார் மற்றும் இந்தாண்டு மார்ச் மாதம் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT