இந்தியா

தில்லி தீ விபத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

14th May 2022 08:51 AM

ADVERTISEMENT

தில்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேற்கு தில்லியில் உள்ள முன்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலக கட்டடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 27 போ் உயிரிழந்தனா். 70-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா்.

மேலும் பலா் தீயில் சிக்கி உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு  தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீயணைப்பு படையினா் கடுமையாக போராடி இரவு 10.30 மணிக்கு தீயை அணைத்ததாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | தில்லி அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: 27 போ் பலி

இந்த தீ விபத்து சம்பவத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் மோடி ஆகியோா் வருத்தம் தெரிவித்துள்ளனா். 

தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

'தில்லி விபத்தில் பலர் பரிதாபமாக உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT