இந்தியா

உண்மையின் குரலைஇனி அடக்க முடியாது: காங்கிரஸ்

12th May 2022 02:05 AM

ADVERTISEMENT

தேசத் துரோக சட்டத்தைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரக்கு வரவேற்பு தெரிவித்த காங்கிரஸ், ‘உண்மையின் குரலை இனி அடக்க முடியாது. கருத்து வேறுபாடுகளை அடிபணியச் செய்பவா்களுக்கு தெளிவான செய்தியை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது’ என்று கூறியது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘உண்மையை உரைப்பது என்பது தேச பக்தி; துரோகம் அல்ல. அதுபோல, உண்மையைக் கேட்பது என்பது ராஜ தா்மம். ஆனால், உண்மையை நசுக்குவது ஆணவம். மக்கள் இனி பயப்பட வேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT