இந்தியா

சிவ சேனை எம்எல்ஏ மாரடைப்பால் துபையில் மரணம்

12th May 2022 12:11 PM

ADVERTISEMENT


மும்பை: சிவ சேனை எம்எல்ஏ ரமேஷ் லட்கே, துபையில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52.

ரமேஷ் லட்கே தனது குடும்பத்தினருடன் துபையில் விடுமுறையைக் கழிக்க சென்றிருந்த போது, புதன்கிழமை இரவு மாரடைப்பால் மரணம் அடைந்ததாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க.. உண்மையான சிபிஐ அதிகாரிகள் நடத்திய போலி சோதனை: நடந்தது என்ன?

லட்கே, அந்தேரி கிழக்கு தொகுதியில் சிவ சேனை சார்பில் போட்டியிட்டு இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தவர். அவரது உடல் இன்று மும்பைக்கு எடுத்து வரப்படும் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அவரது உடலை மும்பைக்கு எடுத்து வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதையும் படிக்க.. டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சிவ சேனைக் கட்சி ஆட்சியில் அங்கம் வகித்து வருகிறது.
 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT