இந்தியா

மருத்துவம் படிக்க ஆசை: சிறுமியின் பதிலால் உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் மோடி

12th May 2022 06:46 PM

ADVERTISEMENT

 

ஏன் மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறாய் என்கிற கேள்விக்கு சிறுமி அளித்த பதிலால் பிரதமர் மோடி உணர்ச்சி வசப்பட்டார்.

குஜராத் மாநிலத்தின் பரூச் நகரில் பயனாளிகள் நிதியுதவி பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட 4 முக்கிய திட்டங்கள் 100 சதவீதம் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக பெரிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இதில், இத்திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பல பயனாளிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் கானொலி வாயிலாக கலந்துகொண்ட பிரதமர் மோடி பயனாளர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, பார்வையற்ற பயனாளி ஒருவரிடம் பேசும்போது ‘உங்கள் மகள்களை என்ன படிக்க வைக்கிறீர்கள்?’ எனக் கேட்டார்.

இதற்கு அந்தப் பயனாளி ‘என் மூன்று மகள்களில் ஒருவர் மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறார்’ எனக் கூறினார்.

பின், அவர் மகளுடன் பேசிய மோடி ‘ஏன் மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறாய்?’ எனக் கேட்டதற்கு அச்சிறுமி ‘என் தந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பையும், அவர் படும் துன்பத்தையும் பார்த்ததால் நான் மருத்துவர் ஆக விரும்பினேன்’ என்றபடி பார்வையற்ற தன் தந்தையின் தோளில் சாய்ந்து  அழ ஆரம்பித்தார்.

இதைப்பார்த்த பிரதமர் மோடி, சில நொடிகள் மேற்கொண்டு பேசமுடியாமல் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். பின்பு ‘கருணைதான் உங்களின் வலிமை. உங்கள் படிப்பிற்கு எதாவது உதவி தேவைப்பட்டால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்’ என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT