இந்தியா

ஒடிசாவில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது

12th May 2022 01:39 PM

ADVERTISEMENT

ஒடிசாவில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். 

கந்தகிரி காவல் நிலையத்திற்கு உள்பட்ட பாரமுண்டா மைதானத்தில் புதன்கிழமை நள்ளிரவு துப்பாக்கிச் சூடு  நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 காவலர்கள் காயமடைந்தனர். 

பாரமுண்டா ஹவுசிங் போர்டு காலனியில் ஆயுதம் ஏந்தியபடி கொள்ளையடிக்க சக்கரா பாரிக் மற்றும் அவரது கூட்டாளிகள் திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கானாடகிரி போலீஸார் சிறப்புப் படையினருடன் அந்த மர்மநபரை பிடிக்க மைதானத்துக்கு வந்தனர்.

காவல்துறையினர் அவர்களை நெருங்கி வருவதைக் கண்டு, குற்றவாளிகள் காவலர்கள் மீது கைக்குண்டு வீசினர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

ADVERTISEMENT

பதிலடி கொடுக்கும் வகையில், காவல்துறையும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. துப்பாக்கிச் சண்டையில், குற்றவாளிகளில் ஒருவர் காயமடைந்தார். மற்றொருவர் தப்பியுள்ளார். 

காயமடைந்தவர் குற்றவாளி பாரிக் என்று அடையாளம் காணப்பட்டது. இவர் பிரபல குற்றவாளி என்றும், அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் துணை ஆணையர் பிரதிக் சிங் தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்திலிருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கி மற்றும் ஒரு காரை போலீசார் கைப்பற்றினர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT