இந்தியா

திரைப்பட காட்சியை உண்மை எனப் பகிர்ந்து கிண்டலுக்குள்ளான கிரண்பேடி

12th May 2022 01:02 PM

ADVERTISEMENT

பொய்யான தகவல் அடங்கிய விடியோவை பகிர்ந்ததற்காக முன்னாள் காவல்துறை அதிகாரி கிரண்பேடியை இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.

புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநரும், இந்தியாவின் முதல் பெண் காவல்துறை அதிகாரியான கிரண்பேடி சமீபத்தில் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்த விடியோ இணையத்தில் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க | சீனாவில் ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்த பயணிகள் விமானம்: 40க்கும் மேற்பட்டோர் காயம்

புதன்கிழமை அவர் தனது பக்கத்தில் கடலில் சுறா ஒன்று ஹெலிகாப்டர் ஒன்றை விழுங்குவது போன்ற காட்சிகள் அடங்கிய காணொலியைப் பகிர்ந்திருந்தார். அந்தக் காணொலியில், “நேஷனல் ஜியோகிராபி சேனல் இந்த காணொலிக்கு பத்து லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT