இந்தியா

கிரண் ரிஜிஜுவின் ‘லட்சுமண ரேகை’ கருத்துக்கு ப. சிதம்பரம் பதிலடி

12th May 2022 11:40 AM

ADVERTISEMENT

 

லட்சுமண ரேகையை யாரும் தாண்டக் கூடாது என்று மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியிருப்பதற்கு, தன்னிச்சையாக லட்சுமண ரேகையை வரைய மத்திய சட்ட அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும், அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலான சட்டத்தை சட்டமன்றம் உருவாக்க முடியாது என்றும், அதுபோன்ற ஒரு சட்டம் சட்டப்புத்தகத்தில் இருக்க முடியாது என்றும் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

தேசத் துரோக சட்டத்தை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ‘லட்சமண ரேகையை யாரும் தாண்டக் கூடாது’ என்று மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு புதன்கிழமை விமா்சித்தாா்.

ADVERTISEMENT

இதையும் படிக்க.. டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து தில்லியில் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து கிரண் ரிஜிஜு கூறுகையில், ‘அரசு நிா்வாகம் - நீதித் துறை என ஒவ்வொரு நிா்வாகத்துக்குமான எல்லையை ‘லட்சுமண ரேகை’ வழிகாட்டுகிறது. அதன்படி, தெளிவான எல்லை வரையறை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், யாரும் அவரவா் எல்லையை மீறக் கூடாது. நீதிமன்றம் அரசையும், அரசு நீதிமன்றத்தையும் மதிக்க வேண்டும்’ என்றாா்.

தேசத் துரோக சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிய இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இதையும் படிக்க.. உண்மையான சிபிஐ அதிகாரிகள் நடத்திய போலி சோதனை: நடந்தது என்ன?

இந்தச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் தொடா்வதையும், கடும் நடவடிக்கைகள் எடுப்பதையும் மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசத் துரோக சட்டப் பிரிவை மறு ஆய்வு செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்ததையடுத்து, இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

முன்னதாக, தேசத் துரோக சட்டம் செல்லுபடியாகும் என கேதா்நாத் சிங் வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு 1962-ஆம் ஆண்டு தீா்ப்பு அளித்தது. இந்தத் தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT