இந்தியா

தமிழகம் உள்பட 15 மாநிலங்கள்...52 மாநிலங்களவை இடங்கள்...தேர்தல் தேதி அறிவிப்பு

12th May 2022 04:00 PM

ADVERTISEMENT

15 மாநிலங்களில் உள்ள 52 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 11 இடங்கள் மகாராஷ்டிரம், தமிழகத்தில் தலா ஆறு இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது.

ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், ஒடிசா பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட், பிகார், ஜார்கண்ட், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படுகிறது. 

கடந்த மாதம் நடத்தப்பட்ட மாநிலங்களவை தேர்தலை தொடர்ந்து பாஜக 100 உறுப்பினர்களை பெற்று வரலாறு படைத்தது. 1990க்கு பிறகு எந்த ஒரு கட்சியும்  மாநிலங்களவையில் 100 உறுப்பினர்களை பெற்றதில்லை.  

இதையும் படிக்கசஜித் பிரேமதாசா இடைக்கால பிரதமராக ஆதரவு?...

ADVERTISEMENT

கடந்த மாதம் திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் காலியாக இருந்த மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு அங்குள்ள தலா ஒரு இடத்தை பாஜக பெற்றது. இதன் காரணமாக, பாஜகவின் பலம் 101 ஆக உயர்ந்தது. 

245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு 123 பேரின் ஆதரவு தேவை.

Tags : Rajya Sabha
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT