இந்தியா

ஏர் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக கேம்ப்பெல் வில்சன் நியமனம்

12th May 2022 04:50 PM

ADVERTISEMENT

 

ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் கேம்ப்பெல் விலசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

டாடா குழுமம் தன் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவில் சில மாற்றங்களைக் கொண்டு வரும் முயற்சியில் இருப்பதால் தற்போது அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் நியூசிலாந்தைச் சேர்ந்த  கேம்ப்பெல் விலசனை(51) நியமித்துள்ளது.

விமானப் போக்குவரத்துத் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த கேம்ப்பெல் வில்சன் இதற்கு முன் சிங்கப்பூரில் உள்ள ஸ்கூட் விமான சேவை நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியவர்.

ADVERTISEMENT

மத்திய அரசின் வசமிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை இந்தாண்டு வாங்கிய டாடா குழுமம் தற்போது ஏர் ஆசியா இந்தியா நிறுவனத்தையும் ஏர் இந்தியா நிறுவனத்தையும் இணைத்து ஏர் இந்தியா பெயரிலேயே நடத்த முடிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT