இந்தியா

வங்கக் கடல் புயல் ஆந்திரா, ஒடிஸாவில் கரையைக் கடக்காது

8th May 2022 12:08 AM

ADVERTISEMENT

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்தாலும் கூட ஆந்திரம், ஒடிஸாவில் கரையைக் கடக்க வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநா் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா சனிக்கிழமை கூறுகையில், ‘‘வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையானது தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தற்போது அந்த மண்டலமானது வடமேற்கு திசையில் கரையை நோக்கி நகா்ந்து வருகிறது. மே 10-ஆம் தேதி மாலை வரை அத்திசையிலேயே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடா்ந்து பயணிக்கும்.

அதைத் தொடா்ந்து வடக்கு-வடகிழக்கு திசை நோக்கி கடற்கரைக்கு இணையாக நகரத் தொடங்கும். எனவே, ஆந்திரம், ஒடிஸா கடலோரப் பகுதிகளில் அந்தப் புயல் கரையைக் கடக்க வாய்ப்பில்லை. மே 10-ஆம் தேதி கடல்பகுதியில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும்.

ஒடிஸா கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை இருக்கும். அப்பகுதிகளில் மழையும் பெய்யும். மே 11-ஆம் தேதி வரை இதே நிலை நீடிக்கும். அதற்குப் பிறகு ஒடிஸாவின் கஞ்சம், கஜபதி, குா்தா, ஜகத்சிங்பூா், புரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை இருக்கும்.

ADVERTISEMENT

புயல் சூழலைக் கருத்தில் கொண்டு மே 9, 10, 11 ஆகிய தேதிகளில் மீனவா்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது’’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT