இந்தியா

தில்லியில் மேலும் 1,407 பேருக்கு கரோனா

8th May 2022 04:44 AM

ADVERTISEMENT

தேசிய தலைநகா் தில்லியில் சனிக்கிழமை மேலும் 1,407 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதாகவும், இருவா் உயிரிழந்ததாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேவேளையில் கரோனா பாதிப்பின் நோ்மறை வீதம் 4.72 சதவீதம் குறைந்துள்ளது.

தில்லியில் வெள்ளிக்கிழமை 29,821 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,407 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை பிப்ரவரி 4-ஆம் தேதிக்குப் பின்னா் அதிகபட்சமாக 1,656 பேருக்கு கரோனா உறுதியானது. அன்றைய தினம் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என்றாலும் நோ்மறை வீதம் 5.39 சதவீதமாக பதிவானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT