இந்தியா

அதிகரிக்கும் வெப்பநிலை: பிரதமர் மோடி ஆலோசனை

5th May 2022 06:48 PM

ADVERTISEMENT

நாடு முழுவதும் அதிகரித்துவரும் வெப்பநிலை உயர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பேரிடர் மேலாண்மை குழு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெப்பம் வாட்டி வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகளின்படி கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் சராசரி வெப்பம் பதிவாகியுள்ளது. ஏப்ரல் மாதம் முழுக்க சராசரியாக 35.9 டிகிரி செல்சியஸ் முதல் 37.78 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பம் பதிவாகியுள்ளது. 

இதையும் படிக்க | ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாத சிறைதண்டனை: 2017ஆம் ஆண்டு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

கோடை காலம் தொடங்கியதிலிருந்து  வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. நாட்டின் முக்கிய நகரங்களில் கடந்த வாரம் 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது.

ADVERTISEMENT

இந்நிலையில் அதிகரித்துவரும் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

இதையும் படிக்க | தகுதியானவர்களுக்கு வேலை வழங்குவது உறுதி: பகவந்த் மான்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சரவை செயலாளர், பேரிடர் மேலாண்மை குழுவின் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags : modi summer
ADVERTISEMENT
ADVERTISEMENT