இந்தியா

சத்தீஸ்கர்: ஜேசிபி இயந்திரத்தின் டயர் வெடித்து 2 பேர் பலி

5th May 2022 05:38 PM

ADVERTISEMENT

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள வாகனப் பணிமனையில் இரு பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஜேசிபி இயந்திரத்தின் டயருக்கு காற்று நிரப்பிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானர். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT