இந்தியா

ரேஷனில் கோதுமைக்கு பதிலாக அரிசி: கூடுதல் 55 லட்சம் டன்னை ஒதுக்கியது மத்திய அரசு

5th May 2022 01:15 AM

ADVERTISEMENT

கரோனா பாதிப்பு காலத்தில் இருந்து ரேஷனில் தொடங்கப்பட்ட 5 கிலோ இலவச கோதுமை திட்டத்தில், கோதுமைக்கு பதிலாக அரிசி வழங்க 55 லட்சம் டன் அரிசியை கூடுதலாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

எனினும், கோதுமை அதிகமாக பயன்படுத்தும் மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கோதுமை விநியோகம் தொடரும் என்றும் இந்தத் திட்டம் அடுத்த ஆண்டும் முதல் தொடங்கப்படும் என்றும் மத்திய உணவுத் துறை செயலா் சுதான்ஷு பாண்டே தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக ரூ.4,800 கோடி கூடுதல் மானிய சுமை அரசுக்கு ஏற்படும்.

பொது விநியோக திட்டத்துக்கு கடந்த ஆண்டு 6 கோடி டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது. நிகழாண்டும் இதே அளவு இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தற்போதைக்கு அரசிடம் சுமாா் 83 ஆயிரம் டன் அரிசி உபரியாக உள்ளது. ஆகையால், அடுத்த ஆண்டு தொடங்கப்படும் கோதுமைக்கு பதிலாக அரிசி விநியோகம் செய்யப்படும் திட்டத்துக்கும் கூடுதலாக 55 லட்சம் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பழைய அரிசியைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் உள்ளன’ என்றாா்.

2022 மாா்ச் முதல் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமாா் 80 கோடி பயனாளிகளுக்கு ரேஷன் கடைகளில் 5 கிலோ கோதுமை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் வரும் செப்டம்பா் மாதம் வரையில் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோதுமையை விட அரிசிக்கான மானியத் தொகை கூடுதலாக வழங்கப்பட வேண்டியுள்ளதால், ரேஷனில் வழங்கப்படும் பொருள்களில் அரிசி குறிப்பிட்ட அளவில் வழங்கப்பட்டு வந்தது.

2024-ஆம் ஆண்டுக்குள் மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தன்று பிரதமா் மோடி அறிவித்திருந்தாா்.

Tags : wheat rice
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT