இந்தியா

எண்ணெய் எடுக்கப்பட்ட தவிடு மீது 5% ஜிஎஸ்டி: உணவு அமைச்சகம் பரிந்துரை

5th May 2022 02:01 AM

ADVERTISEMENT

எண்ணெய் எடுக்கப்பட்ட தவிடு மீது 5 சதவீத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்க மத்திய உணவு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

நெல்லில் இருந்து அரிசியை பிரித்து எடுக்கும்போது தவிடு கிடைக்கிறது. எண்ணெய் எடுக்கப்படாத தவிடு மீது 5 சதவீத ஜிஎஸ்டி உள்ளது.

இது தொடா்பாக மத்திய உணவுத் துறை செயலா் சுதான்ஷு பாண்டே மேலும் கூறுகையில், ‘எண்ணெய் எடுக்கப்பட்ட தவிடு மீதும் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரைத்து மத்திய நிதியமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். இந்தியாவில் அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் தேவையை நிறைவு செய்ய இந்த நடவடிக்கை உதவும். ஏனெனில், எண்ணெய் எடுக்கப்படாத தவிடை, எடுக்கப்பட்ட தவிடு என்று கூறி வரி இன்றி பெருமளவில் விற்பனை செய்யப்படுகிறது. இவை பெரும்பாலும் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்தப்படுகிறது.

எண்ணெய் எடுக்கப்பட்ட தவிடு மீதும் வரி விதிக்கப்பட்டால், எண்ணெய் எடுக்காமல் தவிடு விற்பனை செய்யப்படுவது குறையும். அரசுக்கும் வருவாய் கிடைக்கும். இப்போது நாட்டில் கிடைக்கும் தவிட்டில் 60 சதவீதம் மட்டுமே எண்ணெய் எடுக்க பயன்படுத்தப்படுகிறது. வரி விதிக்கப்பட்டால் இந்த அளவு அதிகரிக்கும். இதன் மூலம் சமையல் எண்ணெயை இறக்குமதி செய்வதைக் குறைக்க முடியும்’ என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT