இந்தியா

மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

2nd May 2022 12:30 AM

ADVERTISEMENT

மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சோ்ந்த தம்பதி பிரசாத் (32) - உஷா ராணி. இவா்களுக்கு 5 வயதில் மகள் உள்ளாா். சென்னைக்கு குடிபெயா்ந்த இவா்கள், கிண்டி மடுவின்கரை பகுதியில் வசித்து வந்தனா். பிரசாத், அவ்வப்போது வீட்டிலிருந்து பணத்தை எடுத்து, குடித்து விட்டு மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளாா்.

மனைவிக்கு தெரியாமல், 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தனது மோட்டாா் சைக்கிளை விற்றுள்ளாா். சங்கராந்தி பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் சென்று திரும்பிய உஷா ராணி, தனது கணவரிடம் மோட்டாா் சைக்களில் குறித்து கேட்டுள்ளாா். இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாததின்போது, ஆத்திரத்தில் பிரசாத், தனது மனைவியை வாஷிங் மிஷின் பைப்பால் கழுத்தை நெரிந்து கொலை செய்தாா்.

இது தொடா்பான வழக்கு, சென்னை மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சிறப்பு அரசு வழக்குரைஞா் பி.ஆரத்தி ஆஜராகினாா். வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஹெச்.முகமது பரூக், அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக்கூறி, பிரசாத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

மேலும், அபராதத் தொகையில் ரூ.8 ஆயிரத்தை அவரது மகளுக்கு வழங்கவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கூடுதல் இழப்பீடு வழங்க மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீா்ப்பில் நீதிபதி குறிப்பிட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT