இந்தியா

வெப்ப அலை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுரை

1st May 2022 10:11 PM

ADVERTISEMENT

 

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை அபாயம் ஏற்பட்டுள்ளதால், தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் அடுத்த 4 நாள்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனை தேசிய நோய்த்தடுப்பு மையமும் தெரிவித்துள்ளது. 

படிக்க 122 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பம்: ஏப்ரல் மாதத்தில் இந்தியா..

ADVERTISEMENT

இதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இனி வரும் நாட்களில் வெப்பநிலையானது இயல்பை விட அதிகரிக்கும் என்பதால், அனைத்து மாநிலங்களும் வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT