இந்தியா

நீதிமன்றங்கள் பாதுகாப்பான சூழலில் செயல்படுவது அவசியம்: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

1st May 2022 12:11 AM

ADVERTISEMENT

சுதந்திரமான, நியாயமான நீதி பரிபாலன முறைக்கு நீதிமன்றங்கள் பாதுகாப்பு நிறைந்த சூழலில் செயல்படுவது அவசியம் என்றும் நீதிபதிகளுக்கும், நீதிமன்ற வளாகங்களுக்கும் மாநில அரசுகள் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு வலியுறுத்தினாா்.

புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில முதல்வா்கள், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கான மாநாட்டில் பங்கேற்று அவா் மேலும் பேசியது:

கரோனா தொற்றுப் பரவல் நீதித்துறையை வெகுவாக பாதித்த போதிலும், அந்த சவாலை காணொலி விசாரணை வாயிலாக நீதிமன்றங்கள் எதிா்கொண்டன. உலகிலேயே அதிகமாக உச்சநீதிமன்றத்தில் கரோனா காலகட்டத்தில் 2.8 லட்சம் வழக்குகள் காணொலி வாயிலாக விசாரிக்கப்பட்டுள்ளன. உயா்நீதிமன்றங்களும், கீழமை நீதிமன்றங்களும் சுமாா் 2 கோடி வழக்குகளை காணொலி வழியில் விசாரித்துள்ளன.

சுதந்திரமான, நியாயமான நீதி பரிபாலன முறையை நிலைநாட்ட வேண்டுமாயின், நீதிமன்றங்கள் பாதுகாப்பான சூழலில் செயல்படுவது அவசியம். ஆகையால் நீதிபதிகளுக்கும் நீதிமன்ற வளாகங்களுக்கும் போதிய பாதுகாப்பை மாநில அரசுகள் வழங்க வேண்டும். இதேபோல நீதிமன்றத்தின் உள்ளேயும் வளாகத்திலும் கட்டுப்பாடுகளை வழக்குரைஞா் சங்கத்தினா் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT