இந்தியா

தற்கொலை செய்வதாக மிரட்டி வரவழைத்து பெண் கூட்டு பலாத்காரம்; கொலை

29th Mar 2022 03:43 PM

ADVERTISEMENT


ராஜஸ்தான் மாநிலத்தில் இன்ஸ்டகிராம் மூலம் பெண்ணுடன் பழகி, தற்கொலை செய்வதாக மிரட்டி வரவழைத்து நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து கொன்றதாக குற்றம்சாட்டப்படும் நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அஜ்மீர் மாவட்டத்தில், 17 வயது பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 22ஆம் தேதி பயிற்சி நிலையத்துக்குச் சென்று திரும்பிய சிறுமி காணாமல் போயிருக்கிறார். அவரை உறவினர்கள் தேடிய நிலையில், தலை துண்டாக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுத்துள்ளனர்.

அந்த சிறுமியின் குடும்பத்தினர் பாலி மாவட்டம் பிப்லி கா பாஸ் கிராமத்தில் வசித்து வரும் நிலையில், அவரது உடல் சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அஜ்மீர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த அப்பெண்ணின் செல்லிடப்பேசியை ஆய்வு செய்ததில், ஒரு அடையாளம் தெரியாத நபருடன் அப்பெண் பேசி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த அடிப்படையில், இந்த வழக்கில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மொஹம்மது அர்ஷத் என்பவர் முக்கியக் குற்றவாளி என்பதும், இஸ்டகிராம் மூலம் பெண்ணுடன் பழகியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இன்ஸ்டகிராமில் இருவரும் பழகியிருப்பதும், மொஹம்மது, அப்பெண்ணை வீட்டை விட்டு வெளியேறி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தி வந்ததும், இதற்கு அப்பெண் மறுத்து வந்ததும் தெரிய வந்தது.

சம்பவத்தன்று, தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியே, அப்பெண்ணை மொஹம்மது தனது இடத்துக்கு வரவழைத்துள்ளார். அவர்களுக்குள் கடைசியாக நடந்த உரையாடலில், வராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டிய அடுத்த நொடியே அப்பெண் வீட்டை விட்டு வெளியேறியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். உடற்கூராய்வு கிடைத்ததும் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT