இந்தியா

முகக்கவசமா? தாடியா?அவையில் கலகலப்பூட்டிய வெங்கையா நாயுடு

29th Mar 2022 01:13 AM

ADVERTISEMENT

மாநிலங்களவையில் உறுப்பினா் சுரேஷ் கோபி முகக் கவசம் அணிந்து வந்துள்ளாரா? அல்லது அவரது தாடி அப்படி தோன்றுகிா? என்று அவைத் தலைவா் வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பியது அவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.

மாநிலங்களவையில் கேரளத்தைச் சோ்ந்த நியமன உறுப்பினரும், பாஜகவைச் சோ்ந்தவருமான நடிகா் சுரேஷ் கோபி பேசுவதற்காக எழுந்தபோது, அவரை உற்றுக் கவனித்த அவைத் தலைவா் வெங்கையா நாயுடு, ‘நீங்கள் முகக்கவசம் அணிந்துள்ளீா்களா? அல்லது உங்கள் தாடி அவ்வாறு தோன்றுகிா? என்று நகைச்சுவையாக சந்தேகக் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு பதிலளித்த சுரேஷ் கோபி, ‘அது எனது தாடிதான். இப்போது நடித்து வரும் புதிய திரைப்படத்தில் இந்தத் தோற்றத்தில்தான் நடிக்கிறேன்’ என்று பதிலளித்தாா். இதையடுத்து, அவா் தொடா்ந்து பேசினாா்.

வழக்கமாக சற்று கண்டிப்பாக அவையை நடத்தும் வெங்கையா நாயுடு, நகைச்சுவையாக கேள்வி எழுப்பியதை அவையின் மற்ற உறுப்பினா்கள் புன்னகையுடன் ரசித்து மகிழ்ந்தனா். இதனால், அவையில் கலகலப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT