இந்தியா

அகிலேஷ் யாதவுடன் கைகுலுக்கிக் கொண்ட யோகி ஆதித்யநாத்: பேரவையில் ருசிகரம்!

28th Mar 2022 11:42 AM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கைகுலுக்கிக் கொண்டனர். 

403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில், பாஜக 255 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

சமாஜவாதி கட்சி 111 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், அந்த மாநில முதல்வராக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். அவருடன் கேசவ் பிரசாத் மெளரியா, பிரஜேஷ் பதக் ஆகிய இரு துணை முதல்வா்கள் உள்பட 52 அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா். ஆளுநா் ஆனந்தி பென் படேல் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

ADVERTISEMENT

தொடர்ந்து, பேரவை எதிர்க்கட்சித் தலைவராக அகிலேஷ் யாதவ் அக்கட்சியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொள்கின்றனர். 

இதற்காக பேரவைக்கு வந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் பேரவை உள்ளே வந்தபோது அங்கு நின்ற அகிலேஷ் யாதவுடன் கைகுலுக்கிக் கொண்டார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT