நாட்டின் எல்லைப் பகுதிகளையொட்டிய 50 இடங்களில் சாலை வசதிகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும்படி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திடம் சுற்றுலாத் துறை கோரிக்கை வைத்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி எழுத்துபூர்வமாக பதிலளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, எல்லைப் பகுதிகள் உட்பட நாட்டில் பல திட்டங்கள் மூலம் சுற்றுலாவை ஊக்குவிக்க சுற்றுலாத் துறை முயற்சித்து வருகிறது.
படிக்க | இலங்கை அதிபருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: தமிழ், சிங்களத்தில் ட்வீட்!
சுதேஷ் தர்ஷன் மற்றும் பிரசாத் திட்டத்தின் கீழ் எல்லைப் பகுதிகள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா கட்டமைப்பை மேம்படுத்த சுற்றுலாத்துறை அமைச்சகம் முயற்சி செய்து வருகிறது. இதற்காக மாநில மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மற்றும் மத்திய இடைத்தரகர்களுக்கு நிதியுதவி வழங்குகிறது.
விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துடன் இணைந்து சுற்றுலா வழித்தடங்களை மேம்படுத்த சுற்றுலாத் துறை நிதியுதவி அளிக்கிறது.
எல்லை மாவட்டங்களில் உள்ள சவால்கள், சுற்றுலா மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தடைகள் போன்றவற்றில் உள்ள பிரச்னைகளை மாநில சுற்றுலாத்துறைகளுடன் இணைந்து, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் போக்குகிறது.
படிக்க | பிகாரில் குண்டு வெடிப்பு: 7 பேர் படுகாயம் -மேலும் 3 குண்டுகள்?
தேசிய நீர்வழித்தடங்களில் 9 இடங்களில் படகுத்துறை அமைக்க ரூ.28 கோடி வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அடாரி வாகா எல்லைப் பகுதியில் சுற்றுலா தொடர்பான கட்டமைப்புகளை உருவாக்க ரூ.13 கோடி வழங்கப்பட்டுள்ளது.
எல்லை பகுதிகளில் சுற்றுலாத்துறை அடையாளம் கண்டுள்ள 50 இடங்களில் சாலை வசதிகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும்படி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டார்.