இந்தியா

யாதாத்ரி கோயிலில் கும்பாபிஷேகம்: தெலங்கானா முதல்வர் பங்கேற்பு

28th Mar 2022 01:33 PM

ADVERTISEMENT

 

யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தனது குடும்பத்தோடு பங்கேற்று வழிபாடு செய்தார். 

14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பழமையான கோயிலை புதுப்பிக்கும் பணி கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று, தற்போது நிறைவடைந்துள்ளது. 

இன்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் தெலங்கானா முதல்வர் சந்திசேகரராவ் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். 

ADVERTISEMENT

இக்கோயில் 2,50,000 டன் எடையுள்ள கருப்பு கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் கட்டக்கலை திராவிட மற்றும் காகத்தியன் பாணியில் கட்டப்பட்டுள்ளது. 

கடந்த ஐந்தரை ஆண்டுகளில் ரூ.1,280 கோடி செலவில், கோயிலின் புனரமைப்பு பணிகள் நடத்தப்பட்டன. 2,000க்கும் மேற்பட்ட சிற்பிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் புனரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

மகா கும்ப சம்ப்ரோக்ஷணை நடத்துவதற்கான விரிவான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT