புது தில்லி: புது தில்லி விமான நிலையத்தில் பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், அங்கிருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
பயணிகளை ஏற்றிக் கொண்டு, விமான நிலையத்தின் ஓடுதளத்துக்கு வந்தபோது, விமானம் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த போது விமானத்தில் பயணிகள் இருந்துள்ளனர். உடனடியாக வேறு விமானத்தில் பயணிகள் ஏற்றப்பட்டு, விமானம் புறப்பட்டுள்ளது.
மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.