இந்தியா

காங். எம்எல்ஏ மகன் மீது பாலியல் வழக்கு: பிரியங்காவுக்கு ரயில் டிக்கெட் அனுப்பிய பாஜக

28th Mar 2022 01:16 PM

ADVERTISEMENT


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன் மற்றும் அவனது 4 நண்பர்கள, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கையடுத்து, பிரியங்கா காந்தி வதேராவுக்கு பாஜக சார்பில் ரயில் டிக்கெட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேராவுக்கு, பாஜக மாநில செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் செயலாளருமான ஜிதேந்திர கோத்வால், ரயில் டிக்கெட்டை அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால், விரைவாக ராஜஸ்தானுக்கு வருமாறு பிரியங்கா காந்திக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவின் மகனால் சிறுமி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். எம்எல்ஏவின் அதிகாரத்துக்கு எதிராக போராடும் சக்தி அந்த சிறுமிக்கு இருக்காது என்றும் அவர் சுட்டுரையில் பதிவிட்டு பிரியங்கா காந்தியையும் டேக் செய்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், பிரியங்கா காந்தி அவர்கள், நான் உங்களுக்கு ரயில் டிக்கெட் அனுப்பியுள்ளேன். உடனடியாக ஜெய்ப்பூருக்கு கிளம்பி வாருங்கள். இங்கேயும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களாலும் போராட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். அந்த ரயில் டிக்கெட்டையும் அவர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT