இந்தியா

நாளை தேசிய நீர் விருதுகளை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் 

28th Mar 2022 03:26 PM

ADVERTISEMENT

புதுதில்லி: நீர்வள மேலாண்மைத் துறையில் முன்னுதாரணமாக செயல்பட்டு வந்த மாநிலங்கள், மாவட்டங்கள், பஞ்சாயத்துகள் மற்றும் பள்ளிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை(மார்ச் 29) தேசிய நீர் விருதுகளை வழங்குகிறார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நீர்வள மேலாண்மைத் துறையில் உள்ளவர்களின் பணியை ஊக்குவிக்க நீர்வளத் துறை, நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறை, ஜல் சக்தி அமைச்சகம் ஆகிய துறைகளுக்கு 11 வெவ்வேறு பிரிவுகளில் 57 விருதுகளை வழங்குகிறார்.

11 பிரிவுகள்: சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த கிராம பஞ்சாயத்து, சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி, சிறந்த ஊடகம் (அச்சு & மின்னணு), சிறந்த பள்ளி, சிறந்த நிறுவனம், சிறந்த தொழில், சிறந்த அரசு, சிறந்த நீர் பயனர் சங்கம், மற்றும் சி.எஸ்.ஆர் செயல்பாட்டிற்கான சிறந்த தொழில் என்று தகவலரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT